மனதை வருடும் ‘தனியே’ பாடல்..அப்போ விடாமுயற்சி காதல் கதையா..கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு ட்விஸ்ட்.!
Author: Selvan5 February 2025, 8:58 pm
விடாமுயற்சி படத்தின் புது அப்டேட் வெளியீடு
ஒரு வழியாக பல நாட்களுக்கு பிறகு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது.
கடந்த ஒரு மாதமாக விடாமுயற்சி திரைப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்திருந்த நிலையில்,தற்போது படத்தில் வரக்கூடிய ‘தனியே’ என்ற காதல் பாடலின் லிரிக் வீடியோ ரிலீஸ் ஆகியுள்ளது.
இதையும் படியுங்க: அவசர அவசரமாக நடந்த நடிகை ‘வேதிகா’ கல்யாணம்…அவரே வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஷாக்.!
ஏற்கனவே சவதிகா மற்றும் பத்திகிச்சு பாடல் இணையத்தை கலக்கி வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தில் தனியே என்ற பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை அதே வைப்பில் வைத்துள்ளது.மேலும் அஜித்திற்கும் நடிகை த்ரிஷாவுக்கும் பல காதல் காட்சிகள் இருப்பது போல தெரிகிறது.
ஏற்கனவே முன்பதிவில் வசூலை வாரி குவித்து வருவதால்,முதல் நாள் வசூல் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் அஜித்தை திரையில் காண இருப்பதால்,ரசிகர்கள் நாளைக்காக மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.