போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!

Author: Selvan
24 February 2025, 9:56 pm

தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி

அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால் திரையரங்கில் இதுவரை எவ்ளோ வசூல் செய்துள்ளது என்று பார்ப்போம்.

இதையும் படியுங்க: ‘புஷ்பா’ ஒரு படமா…மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி…கொதித்தெழுந்த பள்ளி ஆசிரியர்.!

மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்,திரிஷா உட்பட பலர் நடித்திருந்தனர்,கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு அஜித்தை திரையில் கண்டதால்,தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதியது,அதன் காரணமாக படத்தின் வசூல் முதல் வாரம் வரை மின்னல் வேகத்தில் அதிகரித்தது.

Vidamuyarchi box office vs OTT release

படம் வழக்கமான அஜித் படத்தை போல் மாஸ் படமாக இல்லாததால்,பெரும்பாலான ரசிகர்களை கவராமல் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் அடிவாங்கியது,பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் எடுத்த இப்படம் எதிர்பார்த்த வசூலை அடையாமலே OTT-க்கு தற்போது தாவியுள்ளது.

மேலும் நிறைய புது படங்களின் வருகையால் விடாமுயற்சி திரையிடப்படும் தியேட்டரின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்துள்ளது.இதுவரை விடாமுயற்சி திரைப்படம் 140 கோடி வசூலை மட்டுமே நெருங்கியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரிவிக்கிறது,அதுமட்டுமல்லாமல் இனி வர கூடிய நாட்களில் பெரிதாக வசூல் இருக்காத காரணத்தினால்,இதுவே விடாமுயற்சி திரைப்படத்தின் மொத்த வசூலாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

  • I haven't lived with my husband for even a year actress sukanya Felt புருஷனோட ஒரு வருஷம் கூட வாழல… கீழ்த்தரமா, கேவலமா பேசினாங்க : மனம் நொந்த சுகன்யா!