சிவகார்த்திகேயன் பகிர்ந்த வீடியோ: வாய் விட்டு சிரித்த ரசிகர்கள்..!

Author: Rajesh
23 March 2022, 12:44 pm

சின்னத்திரையில் திரையுலக பயணத்தை தொடங்கி, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் டாக்டர். இந்த பட வெற்றியைத் தொடர்ந்து, டான், அயலான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. இது தவிர, கமலின் ராஜ்கமல் ப்ரொடக்ஷனில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இதனிடையே நடிப்பதை தாண்டி பாடல்கள் எழுதுவது, படங்கள் தயாரிப்பது, பாடுவது என பல திறமைகள் கொண்டவராகவும் திகழ்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்தினை தயாரித்தார். நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் ‘எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சி’ என்ற பாடலை பலரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து, டாக்டர் படத்தில் செல்லமா பாடலையும் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்திலும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் தனக்கு பிடித்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதோடு, வாய்விட்டு சிரித்து வருகின்றனர்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 1268

    1

    0