பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
Author: Selvan14 December 2024, 2:00 pm
பிக் பாஸ் வீட்டில் திரையுலக நட்சத்திரங்கள்
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8 கிட்டத்தட்ட 67 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.
பல வித சர்ச்சைகளுக்கு மத்தியில் போட்டியாளர்கள் தங்களுடைய டாஸ்க்கை விளையாடி வருகின்றனர்.சில போட்டியாளர்களுக்கு வெளியே இருந்து பல பிரபலங்கள் தங்களுடைய ஆதரவுகளை அளித்து வருகின்றனர்.
நேற்று நடந்த விவாதத்தில் ரவிந்தருக்கும்,விஷ்ணுவுக்கும் சலசலப்பு ஏற்பட்டது.ரவீந்தர் ஆரம்பம் முதலே முத்துவை ஆதரித்து வருகிறார்.விஷ்ணு சௌந்தர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தும்,முத்துவை சீண்டியும் வருகிறார்.
இதையும் படியுங்க: என் மனைவிக்கு போன் செய்து பேசியதை லீக் செய்யட்டுமா? பிக் பாஸ் பிரபலங்கள் மோதல்!
இப்பிடி பிக் பாஸ் வெளியேவும் பல சர்ச்சைகள் போய்ட்டு இருக்கும் போது,விடுதலை 2 படக்குழு திடீரென பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளது.இப்படம் வரும் 20 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதால் படக்குழு படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளது.
இதனால் பிக் பாஸ் சீசன் 8 வீட்டிற்கு நடிகர் சூரி,மஞ்சு வாரியோர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று போட்டியாளர்களிடம் கலந்துரையாடினர்.அவர்களை போட்டியாளர்கள் கேக் வெட்டி உற்சாக வரவேற்பை அளித்தனர்.