ஒரு கிராமத்தை உருவாக்கிய வெற்றிமாறன்…விடுதலை 2 மேக்கிங் வீடியோ ரிலீஸ்….!
Author: Selvan15 December 2024, 8:03 pm
விடுதலை 2: படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
கடந்த ஆண்டில் வெளிவந்த விடுதலை திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பில் உருவான இப்படத்தில் நடிகர் சூரி முதன் முதலில் ஹீரோவாக களம் இறங்கி ரசிகர்ககளின் பாராட்டை பெற்றார்.
இதன் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ள விடுதலை 2 வருகின்ற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்க: இயக்குனர் சிவாவை டார்ச்சர் செய்த நயன்தாரா:பிஸ்மி சொன்ன தகவல்… பரபரப்பில் கோலிவுட்..!
தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் படத்தின் கதையும், அதற்காக நடிகர்கள் செய்த உழைப்பும் அழகாக பதிவாகியுள்ளது.
இந்த பாகத்திற்காக ஒரு பிரமாண்டமான கிராமத்து செட்டை உருவாக்கியுள்ளார் வெற்றிமாறன்.தற்போது இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடம்,படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.