விடுதலை பட நாயகி ஏஆர் ரஹ்மானின் மருமகளா: மாடர்ன் உடையில் வெளியிட்ட போட்டோ ஷுட் வைரல்..!

Author: Vignesh
8 April 2023, 11:45 am

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றதில் நடித்திருக்கும் படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ளார்.

பீரியட் க்ரைம் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் , நடிகை பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

viduthalai-updatenews360

சிறிய பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், கதை விவாதத்திற்குப் பின்னர் தொடர்ச்சியாக மெருகேற்றப்பட்டு 2 பாகங்கள் கொண்டதாக விரிவாக்கப்பட்டுள்ளது.

எதார்த்தமாக எடுக்கப்பட்டு வெற்றிப்பெற்று வரும் விடுதலை படம் குறித்து அதில் நடித்த பல நடிகர் நடிகைகள் ஷூட்டிங் அனுபவத்தையும் வெற்றிமாறன் இயக்கத்தை பற்றியும் தெரிவித்து வருகிறார்கள்.

viduthalai-updatenews360

அந்தவகையில் தற்போது, “விடுதலை” திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் பவானி ஸ்ரீ. இவர் சினிமாவிற்கு வரும் முன்னரே ஒரு மாடலாக இருந்து வருகிறார்.

viduthalai-updatenews360

மேலும் இவர் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் சகோதரி மற்றும் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை சுற்றியுள்ளவர்கள் சினிமாவில் இருந்த காரணத்தினால் இவரும் சினிமாவிற்குள் வர வேண்டும் என மிகுந்த ஆர்வம் காட்டி வந்ததாகவும், தற்போது தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் சில திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.

viduthalai-updatenews360

இந்த நிலையில், நடிகை பவானி ஸ்ரீ அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாகவும் இருந்து வரும், இவர் மார்டன் உடையில் இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது, வியப்பாகவும் விடுதலை படத்தில் நடித்துள்ளது இவரா? எனவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

viduthalai-updatenews360

அந்த வகையில் மாடலாக இருக்கும் நடிகை பவானி புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள், பாவானி இவ்வளவு அழகாக இருப்பாங்களா? என கருத்துக்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 677

    2

    0