நீ நல்ல நடிகன்டா.. சூரியை பாராட்டிய இளையராஜா – “விடுதலை” விமர்சனம்!

Author: Shree
29 March 2023, 9:18 am

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றதில் நடித்திருக்கும் படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ளார்.

பீரியட் க்ரைம் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் , நடிகை பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நாளை மறுநாள் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சிறிய பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், கதை விவாதத்திற்குப் பின்னர் தொடர்ச்சியாக மெருகேற்றப்பட்டு 2 பாகங்கள் கொண்டதாக விரிவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட்டும் கூட பெரிதாகிவிட்டதாக ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறனே தெரிவித்தார். இப்படத்தின் சூரியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும் என்றார்.

இந்நிலையில் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது. இப்படத்தை பார்த்த இசைஞானி இளையராஜா ‘ படம் சிறப்பாக வந்துள்ளது, மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை வெற்றிமாறன் கொடுத்துள்ளார்’ என கூறியதோடு சூரியின் நடிப்பு பிரமாதம் என கூறி பார்ட்டியுள்ளாராம். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் படத்தை காண காத்திருக்கிறார்கள்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!