நீ நடிகனே கிடையாது…!மேடையில் அசிங்கப்படுத்திய இளையராஜா…

Author: Selvan
27 November 2024, 11:54 am

விடுதலை பாகம் 2 இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்

நேற்று சென்னையில், விடுதலை பாகம் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சூரி, விஜய்சேதுபதி, வெற்றிமாறன், இளையராஜா, மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Viduthalai Part 2 Trailer Launch

வெற்றிமாறன்-க்கு நடந்த சலசலப்பு

நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் பேசிக்கொண்டிருக்கும்போது சிலர் இடையூறு செய்ததால், அவர் கோபமாக மைக் வைத்துவிட்டு மேடையிலிருந்து எழுந்து சென்றார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சூரியை திணறடித்த இளையராஜாவின் கேள்வி

முன்னதாக, இசையமைப்பாளர் இளையராஜா பேசும் போது, அவர் சூரியிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டு திணறடித்தார். அதில் சில நிகழ்வுகள்:

  1. இளையராஜா: “சூரி, உங்க பெயர் சொன்ன உடனே யாரும் கத்தவில்லை, விசில் அடிக்கல. நீ ஹீரோதானே?”
    • இந்த கேள்வி கேட்டபோதே சூரி எதற்காக இதை கேட்டார் என்று சிரிப்புடன் அவரருகே சென்றார்.
  2. இளையராஜா: “நீங்கள் எத்தனை படத்தில் ஹீரோவாக நடிக்கிறீங்கன்னு கேட்க”
    • சூரி “இரண்டு படங்களில் ஹீரோவா நடிச்சிருக்கேன்” என்றார்.
  3. இளையராஜா: “உன்னை ஹீரோவா மாற்றியதே வெற்றிமாறன் தானே? அப்போ நீ ஹீரோவா நடிக்கிறது காமெடியா இல்லையா?” என்று நக்கலுடன் கேள்வி எழுப்பிய அவர்
    • சூரிக்கு என்ன சொல்லுவதுனு தெரியாமல் திகைத்து போய் நிற்பார்.
Soori Ilaiyaraaja Conversation

சூரி ரசிகர்களின் அதிர்ச்சி

இளையராஜாவின் இந்த நக்கல் மற்றும் கேள்விகள், சூரி ரசிகர்களுக்கு குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து புதிய பரிமாணத்தை நோக்கி செல்கிறார் என்பதை பலரும் பாராட்டினர்.

இதையும் படியுங்க: விஜய்யை டம்மியாக்கிய வெற்றி மாறன்… விடுதலை 2 ட்ரெய்லரில் அந்த வசனத்தை கவனிச்சீங்களா?!

விடுதலை பாகம் 2 படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 157

    0

    0