நீ ஹீரோன்னு சொன்னா எவன் படம் பார்ப்பான்? கடைசி நேரத்தில் விஜய்சேதுபதி – சூரி வயிற்றில் அடிச்ச வெற்றிமாறன்!
Author: Shree10 March 2023, 7:53 pm
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் விடுதலை. இப்படம் இந்த மாதத்தின் இறுதியில் இப்படம் வெளியாகவுள்ளது. படம் முழுக்க சூரியை வைத்தே கதை நகர்த்தப்பட்டாலும் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கதைக்கு வலு சேர்த்துள்ளார்.
அதன் படி இரண்டாம் பாகம் முழுக்க விஜய் சேதுபதியை வைத்தே படம் எடுக்கப்படுமாம். காரணம் காமெடி நடிகர் சூரி என்ன தான் சிறப்பாக நடித்தாலும் அவருக்கு மார்க்கெட் இல்லை. இதனால் அவர் ஹீரோ என்று படம் பார்க்க வரும் கூட்டம் கொஞ்சம் குறையலாம்.
இதனை மனதில் கொண்டு மாஸ்டர் பிளான் போட்ட வெற்றிமாறன் விஜய் சேதுபதிக்கு அழுத்தம் கொடுத்து அவரை வைத்தே விளம்பரம் செய்து வருகிறார்கள். இதெல்லாம் பிசினஸ் ட்ரிக்ஸ் சொன்னா உங்களுக்கு புரியாது என்றவாறு சிரிக்கிறாராம் வெற்றிமாறன். பாவம் இதுல சிக்கினது சூரி தானா அப்போ? என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.