பொதுவாக பெரிய நடிகர்கள் இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் போட்டிப்போட்டுக்கொண்டு வெளியாகி யார் பெருசு என வசூலில் மோதிக்கொள்வார்கள். அப்படித்தான் ரஜினி- கமல், அஜித் விஜய் , சிம்பு தனுஷ் என இருந்த காலம் மாறி தற்போது சிம்பு – சூரி என போட்டி ஆரம்பித்தது.
சிம்பு தமிழ் சினிமாவில் நட்சத்திர இளம் நடிகராக இருந்த காலம் மாறி காமெடி நடிகர் சூரியுடன் போட்டிபோடுவதை பலர் விமர்சித்தனர். பத்து தல படம் – சூரியின் விடுதலை படத்துடன் மோதி முதல் நாள் கலெக்ஷன் அள்ளியது.
அதன் பின்னர் பத்துதல படத்திற்கு கலவையலான விமர்சனங்கள் வந்தது, வசூலில் சறுக்கலை சந்தித்தது. பின்னர் போட்டியில் பின் தங்கி வருகிறது. ஆக்ஷன் காட்சிகளுடன்விறுவிறுப்பாக கதை சென்றாலும் வெற்றிமாறனின் கதைக்கு ஈடாக முடியவில்லை. இது தான் படத்தோல்விக்கு மிகப்பெரிய காரணமாகவும் அமைந்தது.
சிம்புவின் பத்து தல படம் வெளிவந்து 6 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் பின்னடைவு சற்று மோசமான வசூல் தான் கிடைத்துள்ளது. 6ஆம் நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ.51 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் படத்தின் தமிழ்நாட்டு வசூல் ரூ.32 கோடியைத் தாண்டியுள்ளதாக தகவல் கூறுகிறது.
சூரியின் விடுதலை, கதை ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது. சூரிக்கு கதாநாயகனாக அறிமுகாகிய முதல் படமே நல்ல வெற்றி கொடுத்துள்ளது. இப்படம் வெளிவந்த முதல் நாளில் ரூ. 6.5 கோடி வரை வசூல் செய்திருந்தது. இரண்டாவது நாட்கள் முடிவில் சுமார் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது. கடைசியாக 6ம் நாள் வசூல் 35.50 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பத்துதல தொய்வடைந்து சூரியின் விடுதலை டாப்பில் வந்துவிடும் என்று கணிக்கிறது சினிமா வட்டாரம்.
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
This website uses cookies.