அந்த சைக்கோ Pant Zip-பை கழட்டி.. மோசமா நடந்துகிட்டான் – வித்யா பாலன் அதிர்ச்சி பேட்டி..!

Author: Vignesh
27 February 2024, 3:31 pm

இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் நடிகைகளில் திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகைகள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன். பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன். மிகவும் சவாலான தைரியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்துவார்.

vidya balan

அந்தவகையில், சில்க் ஸ்மிதாவின் பயோபிக் திரைப்படமான ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார்.

இவர் அஜித்திற்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது, 44 வயதாகும் வித்யா பாலன் கல்லூரி படிக்கையில், தனக்கு நடந்த ஒரு மோசமான சம்பவத்தை பகிர்ந்து உள்ளார். அதாவது, ஒரு முறை வெளியூர் செல்கையில் ரயில் பயணத்தின் போது பெண்கள் பெட்டியில் இருந்தேன். திடீரென, ஒரு ஆண் அந்த பெட்டியில் ஏறினார்.

பெண்கள் எல்லோரும் தன்னை பார்க்கிறார்கள் என்று தெரிந்ததும், உடனே அந்த நபர் அவரது Pant Zip கழட்டி சுய இன்பம் செய்ய ஆரம்பித்தார். என்ன செய்வது என்றே எங்களுக்கு புரியவில்லை. ஒரு கட்டத்தில், அந்த நபரை அடித்து அடுத்த ஸ்டேஷன் வந்ததும், வெளியே தள்ளி காவல் துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைத்ததாக வித்யா பாலன் தெரிவித்துள்ளார். மேலும், இதே போல் பல சைக்கோக்கள் உள்ளனர். தங்களுக்கு ஏதேனும், பிரச்சனை வருமா என்று ஒரு பெண் ஒதுங்கி விடாமல் பயப்படாமல் தங்களால் முடிந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 215

    0

    0