சினிமாவில் வாய்ப்பு தருவதாக பலகோடி மோசடி – நடிகை வித்யா பாலன் போலீசில் புகார்!

Author: Rajesh
21 February 2024, 8:57 pm

இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் இருக்கும் நடிகைகளில் திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகைகள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன். பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன். மிகவும் சவாலான தைரியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்துவார்.

vidya balan

அந்தவகையில் சில்க் ஸ்மிதாவின் பயோபிக் திரைப்படமான ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார்.

இவர் அஜித்திற்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது 44 வயதாகும் வித்யா பாலன் போலீசில் அதிரடி புகார் ஒன்றை கூறி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார். அவர் கொடுத்துள்ள புகாரில், தன்னுடைய பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மர்ம நபர் ஒருவர் பல கோடி மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.இதையடுத்து IT Section 66 (C) பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி