மோசம் பண்ணிட்டான்.. மூஞ்சில கூட முழிக்க கூடாது.. கசப்பான அனுபவத்தை வெளியிட்ட வித்யா பாலன்..!

Author: Vignesh
13 April 2024, 5:27 pm

இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் நடிகைகளில் திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகைகள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன். பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன். மிகவும் சவாலான தைரியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்துவார்.

vidya balan

அந்தவகையில், சில்க் ஸ்மிதாவின் பயோபிக் திரைப்படமான ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார்.

மேலும் படிக்க: இந்த உலகத்துல நல்லவங்க எங்க தேடினாலும் கிடைக்க மாட்டாங்க.. வைரலாகும் மீனா வெளியிட்ட வீடியோ..!

மேலும் படிக்க: காசுக்காக இந்த மலமாட கல்யாணம் பண்ண போறியா?.. வரலட்சுமிக்கு குவியும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்..! (video)

இவர் அஜித்திற்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது, வித்யா பாலன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வு ஒன்று குறித்து பேசி உள்ளார். அதில், அவர் கூறிய போது நான் ஏமாற்றப்பட்டேன். என்னுடைய முதல் காதலன் என்னை ஏமாற்றி விட்டான். நான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவரை காதலித்தேன். அவர் காதலர் தினம் அன்று என்னிடம் வந்து முன்னாள் காதலியுடன் டேட்டிங் செல்லப் போவதாக கூறினார்.

அந்த சமயத்தில், நான் ஒதுங்கி விட்டேன். அதன்பின் அவருடைய மூஞ்சில கூட முழிக்க கூடாது என்று நான் முடிவு செய்தேன். பின்னர் நாங்கள் பிரிந்து விட்டோம். இப்போது, வாழ்க்கையில் சிறப்பான நிலையில் இருக்கிறேன் என்று வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 233

    0

    0