ராசியில்லாத நடிகைக்கு வாழ்க்கை கொடுத்த அஜித் – 23 வருட வெறுப்பை கக்கும் நடிகை!

Author: Shree
18 March 2023, 12:01 pm

பிரபல பாலிவுட் நடிகையான வித்யாபாலன் கதைக்கு தகுந்த நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்கள் கவனத்தை ஈர்ப்பார். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் சொந்த ஊரிலே ராசியில்லாத நடிகையாக முத்திரைகுத்தப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டு வருகிறார்.

தற்போது மும்பையில் வசித்து வரும் இவர் இந்தியில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார், இவர் அஜித்தின் நேர்கொண்டப்பார்வை படத்தில் அவரது மனைவியாக நடித்திருந்தார்.

அஜித்துடன் நடித்தது குறித்த அனுபவத்தை சில நாட்களுக்கு முன்னர் பேட்டியில் பேசிய அவர், ” நான் நடிகையாக வளர்ந்த காலகட்டத்தில் மோகன்லால் படத்தில் கமிட் ஆகினேன். ஆனால் அப்படம் சில காரணங்களால் டிராப் ஆனது. இதையடுத்து மலையாள பத்திரிகைகள் நான் ராசியில்லாத நடிகை என்பதால் தான் படம் டிராப் ஆனதாக செய்திகள் வெளியிட்டது.

இதையே பல தயாரிப்பாளர்கள் நம்பி நான் கமிட்டாகிய படத்தில் இருந்து என்னை அடுத்தடுத்து நீக்கிவிட்டார்கள். தமிழில் கூட பாலசந்தர் இயக்கத்தில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து என்னை நீக்கினார்கள். மேலும், மாதவன் நடிப்பில் ரன் படத்திலும் முதலில் ஒப்பந்தமான என்னை நீக்கினார்கள்.

இதனால் எனக்கு தென்னிந்திய சினிமா மீது அதிக வெறுப்பு இருந்தது. அதிலிருந்து அஜித் தான் என்னை மீட்டெடுத்தார். ஆம், நேர்கொண்ட பார்வை படத்தில் அவருடன் நடித்தது வாழ்நாளில் மிகச்சிறந்த அனுபவம். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு 25 வருட வெறுப்பு நீக்கியுள்ளது என்றார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!