உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சாய் பல்லவி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் தான் அமரன்.
இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் மறைந்த இராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ராணுவ வீரர்களின் தியாகத்தையும் அவர்கள் நாட்டிற்காக செய்யும் தியாகத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனின் மனைவியாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார் இதில் அமரக் கதாபாத் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார். சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரிலே இது மிக முக்கியமான அழுத்தமான படம் என்று கூறலாம் என ரசிகர்கள் பலரும் இந்த படத்தை பார்த்து மிகவும் எமோஷ்னலாக பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்தார்கள் .
மேலும் படம் வெளியாகி 5 நாட்கள் ஆகும் நிலையில் அமோக வசூல் குவித்து வருகிறது. இந்த நிலையில் அமரன் திரைப்படத்தை பார்த்த இயக்குனர் விக்னேஷ் இவன் இது பெருத்த அவமானம் என்று அவர் தனது ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறார் .
அவர் இந்த கருத்து சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அதாவது அமரன் படத்தில் என்னை காயப்படுத்திய ஒரு காட்சி எது என்று கேட்டீர்களானால் முகுந்த் தன் தந்த இடம் நகரத்திற்கு வெளியே சொத்து வாங்குவது குறித்து பேசுவது தான்.
அவர்கள் வைத்திருக்கும் தொகையில் வண்டலூர் ரூபி பில்டர்ஸ் என முடிவு செய்கிறார்கள். அன்றாடம் தன் உயிரை தியாகம் செய்ய தயாராக இருந்த ஒரு கேப்டனால் வாங்க முடிந்தது அவ்வளவுதான். என்ன ஒரு அவமானம்.
அவர்களின் சம்பளம் 100 மடங்கு அதிகரிக்க வழி இருந்தால் அது அருமையாக இருக்கும். அதற்கு பங்களிப்பு முதல் நபராக நான் தயாராக இருக்கிறேன் என விக்னேஷ் சிவன் மிகுந்த உருக்கத்தோடு தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவரின் இந்த கருத்து அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
0
0