குலதெய்வ கோவிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் வழிபாடு ; திருமணத்திற்கு பிறகு முதல்முறை… அலைமோதிய ரசிகர்களின் கூட்டம்..!!

Author: Babu Lakshmanan
5 April 2023, 4:53 pm

பிரபல நடிகை நயன்தாரா, தனது கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனின் குலத்தெய்வ கோயிலான தஞ்சை மாவட்டம் வழுத்துரில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் இருவரும் வழிபட்டனர்.

தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நடிகை நயன்தாரா கணவரும், திரைப்பட இயக்குனருமான விக்னேஷ் சிவனின் குலத்தெய்வம் கோவில் என சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு முன் இருவரும் இந்த கோவிலுக்கு வந்த நிலையில், தற்போது இருவரும் மீண்டும் இன்று கோவிலுக்கு வந்தனர்.

இவர்கள் வருகையை ஓட்டி அம்மனுக்கு பால். தயிர் சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள நொண்டி கருப்பு, முனியாண்டவர், மதுரைவீரன், அரியத்தங்கால் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு. தீபம் காட்டி இருவரும் பயப்பக்தியுடன் வழிப்பட்டனர்.

மூலவர் சன்னதிக்குள் அபிஷேகம் நடப்பதை வீடியோ எடுக்கக்கூடாது என தடுத்த விக்னேஷ் சிவன், தன் உடன் அழைத்து வந்த வீடியோகிராபரை விடியோ எடுக்க வைத்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார்.

https://player.vimeo.com/video/814934796?h=0142ded48f&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…