“ரிவெஞ் எடுத்தே ஆவேன்”.. அஜித்தை பழிவாங்க நயன் கொடுத்த பிளான்.. மான பிரச்சினையாக பார்க்கும் விக்கி..!
Author: Vignesh11 March 2023, 11:48 am
விமர்சனங்களை தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தை பிடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. நானும் ரவுடிதான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார் நயன்தாரா, பின்னர் இருவரும் அந்த ஆண்டே பதிவு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாய்யாகியுள்ளார்.
இந்நிலையில், விக்னேஷ் சிவனுக்கு நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், AK 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் திடீரென வெளியேறிய செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதனிடையே, AK 62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் விக்னேஷ் சிவன் இணையத்தில் பல கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.
இதனால் அஜித்தை எப்படியாவது பழி வாங்க மனைவி நயன் தாரா பல பிளான்களை போட்டு கொடுத்து வந்ததாக கூறப்பட்டது. அப்படி விஜய் சேதுபதிக்கு தனி ஒரு கதையை எழுதி விக்கி கண்ஃபார்ம்மும் பண்ணிவிட்டாராம். இதனால், நயன் – விக்கிக்காக விஜய் சேதுபதி நடிக்கும் அப்படம் தற்போது பான் இந்தியா படமாக உருவாக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த படத்திற்காக அபிஷேக் பச்சனையும் நடிக்க வைக்க நயன் பிளான் போட்டுள்ளாராம். இதனிடையே, பிரபல பாலிவுட் எழுத்தாளர் ஒருவரை கதையை எழுத விக்னேஷ் சிவன் அழைத்து இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.