“நீ இல்லாமல் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன்'” – விக்னேஷ் சிவன் உருக்கம்!

Author:
27 July 2024, 6:32 pm

தமிழ் சினிமாவில் பிரபல இளம் இயக்குனரான விக்னேஷ் சிவன் நடிகர் சிம்புவை வைத்து இயக்கிய “போடா போடி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். அதை எடுத்து நானும் ரவுடிதான் திரைப்படத்தை நயன்தாரா மற்றும். விஜய் சேதுபதி வைத்து இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவருக்கு பெயரும் புகழும் தேடி கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் நயன்தாரா போன்ற மிகப்பெரிய நட்சத்திர நடிகையை காதலியாகவும் அந்த படத்தின் மூலமாக ஆக்கிக் கொண்டார். அதை அடுத்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு இரட்டை ஆண் குழந்தைகளை நயன்தாரா பெற்று எடுத்தார். தற்போது குழந்தை குடும்பம் என மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் தனது. அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன் அவருடன் எடுத்துக்கொண்ட அழகான சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ஒரு உருக்கமான பதிவையும் வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

அதாவது, “ஒவ்வொரு முறையும் நான் என் குழந்தைகளைப் பார்க்கும்போது … நிரம்பி வழியும் அன்பின் அளவு விவரிக்க முடியாதது … அதே நேரத்தில் காதல் எத்தனை வருடங்கள் கடந்தாலும் குறைக்கப் போவதில்லை என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்! நம் பெற்றோர்கள் நம்மை தினமும் அப்படித்தான் உணருவார்கள்! நாம் எவ்வளவு வளர்ந்தாலும் அந்த உணர்வு அப்படியே இருக்கும்!

அவர்கள் விரும்பியபடி அவர்களை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்திருப்பதே குறிக்கோள்! ஒவ்வொரு முறையும் நாம் அவர்களை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் உணர வைக்கும் போது வாழ்க்கை அழகாக இருக்கும்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ குமாரி! நீ இல்லாமல் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன்! லவ் யூ அம்மா மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பல வருடங்களில் உங்கள் பிறந்தநாளின் எண்ணற்ற எண்ணிக்கையை சிரிப்பு மற்றும் அமைதியுடன் கொண்டாட வேண்டும்! நெருங்கிய குடும்பத்திற்கு நிறைய மகிழ்ச்சியான தருணங்களை வழங்க கடவுள் கருணை காட்டியுள்ளார். லவ் யூ என பதிவிட்டு வாழ்த்தியுள்ளார். இதையடுத்து பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!