மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.
பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.
தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படியான நேரத்தில் நயன்தாரா 9 ஸ்கின் என்ற சருமம் பராமரிப்பு பொருட்கள் தயாரிக்கும் பிராண்ட் பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதன் அறிமுக விழா மலேசியாவில் சமீபத்தில் நடந்தது. அந்த விழாவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு ரசிகர் ஒருவர் அவர்களது குடும்பத்தை ஓவியமாக வரைந்து சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதை பார்த்ததும் விக்னேஷ் சிவன் கண்கலங்கி அழுத்துவிட்டார். அதனை நயன்தாரா தனது வீட்டில் பத்திரமாக கொண்டுச்சென்று வைத்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.