கதை நல்லா இல்லைனு சொன்னா எதுக்கு ஒ*** வைக்குற..? நெட்டிசன்கள் விளாசியதால் பதிவை நீக்கிய விக்னேஷ் சிவன்..!

Author: Vignesh
24 December 2022, 7:15 pm

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிகை நயன்தாரா தொடர்ந்து நடித்து வருவதன் காரணமாக தான் லேடி சூப்பர்ஸ்டார் என மக்கள் கொண்டாடுகின்றனர்.

இதனிடையே, வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில், உருவாகியுள்ள கனெக்ட்’ படம், வெளியாகவுள்ளது. சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் என பலர் நடித்துள்ள ‘கனெக்ட்’ படம், 99 நிமிடங்கள் ஓடும் எனவும், இப்படத்துக்கு இடைவெளி இல்லை என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

nayanthara - updatenews360.jpg 2

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நயன்தாரா நடித்த “கனெக்ட்” பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இப்படம் தன்னுடைய கணவரின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து என்பதினால் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் என பலரும் விமர்சிக்க தொடங்கினர்.

மேலும் “கனெக்ட்” படத்தின் ப்ரோமோஷனுக்கு விக்னேஷ் சிவன் அதிக செலவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படம் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அந்த அளவிற்க்கு வரவேற்பு இல்லை, நடிகர் விஷால் நடித்த “லத்தி சார்ஜ்” திரைப்படமும் கனெக்ட் படமும் ஒன்றாக வெளியாகிய நிலையில் விஷாலின் “லத்தி சார்ஜ்” படத்திற்கு இருந்த வரவேற்பு கூட இப்படத்திற்கு இல்லை.

lathi vishal movie - updatenews360

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான “கனெக்ட்” படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் “கனெக்ட்” படத்தின் தயாரிப்பாளரான விகேஷ் சிவன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கனெக்ட் படத்தின் போஸ்டரை பகிர்ந்து “கனெக்ட் படம் மிகத் திரில்லரான பேய் படமாக வந்திருக்கிறது இப்படத்தை தயாரித்த விக்னேஷ் சிவமிற்கு நன்றி. இதே போல சோர்வடையாமல் முன்னேறிக்கொண்டே இருங்கள் என்று ஒருவர் பகிருந்ததை ஷேர் செய்து `உங்களுடைய நேர்மையான விமர்சனங்களுக்கு நன்றி இந்த வன்மங்கள் நிறைந்த பொய்யான விமர்சனங்களில் இருந்தும், கருத்துக்களில் இருந்தும் எங்களை காப்பாற்றியதற்கு நன்றி என்று பதிவிட்டிருந்தார்.

connect - updatenews360

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் போட்டிருந்த பதிவு வைரலாகவே நெட்டிசன்கள் பலரும் கனெக்ட் படம் சுமாராகத்தான் இருந்தது. எல்லா பார்வையாளர்களிடம் இருந்தும் நல்ல விமர்சனத்தை எதிர்பார்க்க முடியாது. உங்களுடைய கனெக்ட் படம் நன்றாக இல்லை என்று சொல்வதானால் ஏன் வன்மன் என்று சொல்லி ஒப்பாரி வைக்கிறாய் என்று நெட்டிசன்கள் பாலரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான விக்னேஷ் சிவனை திட்டி தீர்த்து வருகின்றனர்.

connect - updatenews360
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 580

    2

    1