நயன்தாராவுடன் போட்டி போடும் விக்னேஷ் சிவன் : பக்கா ஸ்கெட்ச் தாங்க..!

தமிழ் சினிமாவில் தற்போது நடிகர்கள், நடிகை வாங்கும் சம்பளம் குறித்து தகவல்கள் அவ்வப்போது வெளியாகி, மக்கள் மத்தியில் பேசும் பொருளாகி வருகிறது. அவர்களின் தற்போதைய நிலையை பொறுத்து அவர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.

அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களைப் பெற்று இருந்தாலும், சுமார் ரூபாய் 200கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்திருக்கிறது. தற்போது ஏகே 61 திரைப்படத்தினையும் போனி கபூர் பிரம்மாண்ட பொருட்செலவில் ‌தயாரித்து‌ வருகிறார்.

இந்த படம் குறித்த வெளியவந்த நிலையில், ஏகே 62 படத்தை குறித்து அறிவிப்பு வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்தப்படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் என இந்த படத்தினை தயாரிக்கும் லைகா நிறுவனம் அண்மையில் அறிவித்தது.

இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க விக்னேஷ் சிவனின் காதலியும் முன்னணி நடிகையுமான நயன்தாரா ‌ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனிருத் இசையமைக்கிறார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் துவங்கப்பட்டு அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரீலிசுக்கு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த படத்தில் பணிபுரியும் சம்பள பட்டியல் குறித்த தகவலும் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தில் நடிக்க அஜித்திற்கு ரூபாய் 105 கோடியும், நடிகை நயன்தாராவிற்கு 10கோடி எனவும் அனிருத்துக்கு 5கோடி எனவும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தினை இயக்க இருக்கும் விக்னேஷ் சிவன் தனக்கு சம்பளமாக 10 கோடி லைகா நிறுவனத்திடம் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது. நயன்தாரா போல் தனக்கும் சம்பளத்தை உயர்த்தி கொடுங்கள் அல்லது சமமாக கொடுங்கள் என்பது போன்ற கோரிக்கையும் லைக்கா நிறுவனத்திடம் வைத்துள்ளாராம் விக்னேஷ் சிவன். எப்படியாவது நயன்தாராவிற்கு சமமான சம்பளத்தை பெற்று விட வேண்டும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் மும்முரமாக பேசி வருகிறாராம்.

UpdateNews360 Rajesh

Recent Posts

ஹீரோவாக களமிறங்கும் சங்கர் மகன்…கம்பேக் கொடுப்பாரா விஜய் பட இயக்குனர்.!

பிரபுதேவா இயக்கத்தில் அர்ஜித் கதாநாயகன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்,தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

7 minutes ago

போலீசே ஆதரவு.. என்ன கொலை செஞ்சிடுவாங்க.. ஜாகீர் உசேன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

கொலை மிரட்டல் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாக கொலையுண்ட…

33 minutes ago

காதல் கணவருடன் கருத்து வேறுபாடு? திருமணமான ஒரே வருடத்தில் பிரபல நடிகரின் மகள் எடுத்த முடிவு?!

திருமணமான பிரபலங்கள் விவாகரத்து செய்து வருவது சினிமாத்துறையில் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இது அதிகரித்து வருவதுதான் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

54 minutes ago

25வது நாளை கடந்த ‘டிராகன்’.. தியேட்டரில் வசூல் ஆட்டம்..!

வெற்றிகரமாக 25 வது நாள் பிரதீப் ரங்கநாதன்,அனுபமா பரமேஸ்வரன்,கயாடு லோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ‘டிராகன்’ திரைப்படம்,அஸ்வத் மாரிமுத்து…

1 hour ago

கூட்டணிக்கு நாள் குறித்த தேமுதிக.. பிரேமலதா சொன்ன ‘அந்த’ வார்த்தை!

அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதி என்னுடைய பிறந்த நாள் அன்று பதில் சொல்வேன் என அதிமுக உடன் கூட்டணி…

2 hours ago

This website uses cookies.