அம்மா தாயே… எதிரிக்கு கூட இத செஞ்சி கொடுத்திடாதே… நயன்தாராவின் சமையலுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கி!
Author: Shree16 May 2023, 6:39 pm
மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இடத்தை பிடித்ததோடு லேடி சூப்பர் ஸ்டார் என்ற உச்ச அந்தஸ்தில் இருக்கிறார். தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனா இவர் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.
பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
அந்த படத்தில் நயன்தாராவுடன் பயணித்த அனுபவத்தை குறித்து விக்னேஷ் சிவன் சுஹாசினி மணிரத்தினம் எடுத்த நேர்காணலில் பல சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்துக்கிக்கொண்டார். அப்போது நானும் ரவுடி தான் படத்தின் கதையை சொல்ல முதன் முதலில் நயன்தாராவை பார்க்க அவரது வீட்டுக்கு ஆட்டோவில் தான் சென்றேன். பின்னர் என் வாழ்க்கை இவ்வளவு அழகாக மாறியுள்ளது.
அப்போது உள்ளே அழைத்து உட்காரவைத்த நயன், எனக்கு க்ரீன் டீ கொடுத்தார். அது எனக்கு பிடிக்கவே பிடிக்காது வேறு வழியில்லாமல் குடித்தேன். அன்று பிடிக்கவில்லை என நயன்தாராவிடம் நேரடியாக கூற பயந்த விக்னேஷ் சிவன் இன்று பேட்டியில் வெளிப்படையாக கூறிருப்பதால் அவர்களுக்குள் உள்ள புரிதல் நன்றாக உள்ளது என்பதை அறியமுடிகிறது. இந்த இன்டெர்வியூ பார்த்த பின் நயன்தாரா தெரியாமல் கூட விக்கிக்கு க்ரீன் டீ கொடுத்திடாதீங்க என ரசிகர்கள் கிண்டலாக கூறி வருகிறார்கள்.