நாங்க ரொமான்ஸ் செய்யவே இல்லை.. பிரபல நடிகையிடம் உண்மையை போட்டுடைத்த விக்கி..!

Author: Vignesh
15 April 2023, 12:30 pm

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

Nayanthara - Updatenews360

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்னர் பிரபு தேவா, சிம்பு உள்ளோட்டரை காதலித்து ஏமாந்தார் நயன்.

தற்போது விக்கியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நயன்தாரா வடை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார். அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.

nayanthara - updatenews360.jpg 2

இதனைதொடர்ந்து, சமீபத்தில் விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியொன்றில், தன் காதல் விசயங்கள் பற்றியும் நயன்தாரா பற்றியும் பலவற்றை நடிகை சுஹாசினி மணிரத்னத்திடம் பகிர்ந்து இருக்கிறார். எப்படி நடிகை ராதிகாவுக்கு தெரியாமல் இருவரும் ரகசியமாக காதலித்து ரொமான்ஸ் செய்தீர்கள் என்று சுஹாசினி கேள்வி கேட்டுள்ளார்.

nayanthara - updatenews360.jpg 2

மேலும், ஷூட்டிங்கில் இருவரும் ரொமான்ஸ் செய்யவே இல்லை என்றும், தனக்கு தெரிந்த சில நண்பர்களுக்கு மட்டும் தெரியும் என்றும், நயன் தாராவின் கேரவனுக்கு கூட போகமாட்டேன் எனவும், அது தப்பாகிவிடுமோ என்று தான் என்றும், நானும் ரவுடி தான் படத்தின் செகண்ட் செட்யூல் சமயத்தில் தான் டேட்டிங் வாழ்க்கையை ஆரம்பித்தோம் என தெரிவித்துள்ளார்.

nayanthara - updatenews360.jpg 2

அதன்பின்பும் தான் மேம் என்று தான் நயன் தாராவை கூப்பிட்டு வந்தேன் எனவும், எந்த விதத்திலும் தான் மாற்றிக்கொள்ளவில்லை என்றும், நயன் நெருங்கிய முத்தம் கொடுக்கபோகும் காட்சியின் போது கூட தான் பொசஸ்சிவாக இல்லாமல் இயக்குனராக வேலையை பார்த்தேன் என்று விக்னேஷ் சிவன் சுஹாசினி பகிர்ந்துள்ளார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…