சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
Author: Selvan18 December 2024, 9:50 pm
விமர்சனங்களுக்கு மத்தியில் வைரல் வீடியோ
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா சமீபகாலத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
அவர்கூட அவரது கணவரான விக்னேஷ் சிவனும் புது புது பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்.விக்னேஷ் சிவனை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில்,வலைப்பேச்சு சேனலில் உள்ளவர்களை உருவ கேலி செய்தது போல பேசி இருந்தார்.
இதனால் நயன்தாரா மற்றும் அந்த சேனலுக்கு இடையே பிரச்சனை பூகம்பம் போல் வெடித்துள்ளது.பலர் நயன்தாராவின் அந்த உருவ கேலி கருத்தை எதிர்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: ரஜினி பட பெயரை தட்டி தூக்கிய லோகேஷ்… வெளியானது அடுத்த படத்தின் PROMO!
இந்த சூழலில் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ரீல்ஸ் பண்ணுவது போல் ஆரம்பித்து அவர்களுடைய சந்தோஷமான புகைப்படத்தை சேர்த்து வீடியோவாக பதிவிட்டு,அதில் எங்களுக்கு எதிராக என்ன நடந்தாலும், நாங்கள் இப்படித்தான் சிரிச்சுட்டு போயிட்டே இருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.