இப்போ தான் ‘I AM HAPPY ‘ விக்னேஷ் சிவன் போட்ட திடீர் பதிவு…ரசிகர்கள் கொந்தளிப்பு..!

Author: Selvan
6 February 2025, 6:03 pm

வன்மத்தை கக்கினாரா விக்னேஷ் சிவன்

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில்,இயக்குனர் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா ஸ்டோரி அஜித் ரசிகர்கள் பலரை அதிர்ச்சியாக்கியுள்ளது.

இதையும் படியுங்க: ‘அஜித்’ மேனஜரிடம் ரசிகர்கள் வைத்த கோரிக்கை…ரோகினி திரையரங்கில் நடந்தது என்ன..?

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பல திரைபிரபலங்கள் தியேட்டருக்கு சென்று,படத்தை உற்சாகமாக கண்டு கழித்து வருகின்றனர்.இந்த நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் விடாமுயற்சி படக்குழுவை மறைமுகமாக தாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் அவரது பதிவை வைரல் ஆக்கி வருகின்றனர்.

Vignesh Shivan Instagram story on Vidamuyarchi

சமீப காலமாக விக்னேஷ் சிவன் பல வித சிக்கல்களில் சிக்கி விவாத பொருளாக மாறி வருகிறார்.அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை லைக்கா நிறுவனம் வெளியிட்டது,ஆனால் அதன்பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் திடீரென மகிழ் திருமேனி இயக்க உள்ளார் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்த சூழலில் இன்று விடாமுயற்சி ரிலீசை ஒட்டி விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் “சில நேரங்களில் இந்த விசயங்கள் எப்படி நடக்கும் என நீங்கள் கவலைப்படுவதை நிறுத்தும் போது அற்புதம் நிகழும்” என ஆங்கில வரிகளில் பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி விவாத பொருளாக மாறியுள்ளது.

  • Tamil actor Kaali Venkat’s mother passes away பிரபல நடிகர் வீட்டில் திடீர் சோகம்…துயரத்தில் குடும்பம்…ஆறுதலில் இறங்கிய திரைபிரபலங்கள்.!
  • Leave a Reply