முதலில் புருஷன்…அப்புறம் தான் ஷூட்டிங்…தயாரிப்பு நிறுவனத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நயன்தாரா…!

Author: Selvan
30 December 2024, 2:58 pm

தயாரிப்பு நிறுவனத்தை சிக்கலுக்கு உள்ளாக்க நயன்தாரா முடிவு

தமிழ் சினிமாவில் சமீப காலமாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி பல வித சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள்.இதனால் ரசிகர்கள் மத்தியில் நயன்தாராவுக்கு இருந்த மதிப்பு,மரியாதையும் கொஞ்சோ கொஞ்சமாக குறைந்து வருகிறது,அதுமட்டுமல்லாமல் பெரிய பட வாய்ப்புகளும் அவருக்கு வர வில்லை.

Nayanthara Upcoming Movies

இது ஒருபுறம் இருக்க அவரது கணவரான விக்னேஷ் சிவன் கமிட் ஆன படங்களை ஒழுங்காக இயக்காமல் தாமதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அந்தவகையில் இளம் நடிகரான பிரதீப் ரங்கநாதனை வைத்து LIK படத்தை இயக்கி வருகிறார்.இதில் எஸ் ஜே சூர்யா,கீர்த்தி ஷெட்டி என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.படத்தை 7-ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க,அனிருத் இசையமைக்கிறார்.

LIK Movie Budget Issues

இந்த சூழலில் பட நிறுவனம் விக்னேஷ் சிவன் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.அதாவது கடந்த ஒரு வருட காலமாக பட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில்,இன்னும் முழுமையாக படத்தின் ஷூட்டிங் வேலைகளை விக்னேஷ் சிவன் முடிக்கவில்லை.

இதனால் படத்தின் பட்ஜெட் மேலும் அதிகரித்து வருகிறது.இதனால் தயாரிப்பு நிறுவனம் எங்களால் இதுக்கு மேல பணம் கொடுக்க முடியாது என கூறி,உங்களுடைய சொந்த பணத்தை வைத்து இனி ஷூட்டிங் நடத்திக்கொள்ளுங்கள் என்று சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.இதே தவறை தான் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் திரைப்படத்தின் போது செய்தார்.

இதையும் படியுங்க: தில் ராஜுவின் மாஸ் வசனம்…”கேம் சேஞ்சர்” ப்ரோமோஷன் விழாவில் நடந்த கலகலப்பு…!

இதனால் தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய அடுத்த படமான கவின் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங் வேலைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதால்,நயன்தாராவிடம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழு கால் ஷூட் கேட்டுள்ளது.

Nayanthara and Kavin’s Upcoming Movie

அப்போது அவர் தன்னுடைய கணவர் இயக்கி வரும் LIK படத்திற்கு பணம் இல்லை என்று சொன்னீர்கள்,இப்போ இந்த படத்தை ஸ்டார்ட் பண்ணுறீங்க என கேள்வி கேட்டு முதலில் அந்த படத்தை முடித்து விட்டு வாங்க,அதன்பிறகு நான் நடிக்க வருகிறேன் என்று சொல்லியுள்ளார்.நயன்தாராவின் இந்த பதிலால் தயாரிப்பு நிறுவனம் என்ன முடிவு எடுக்க போகிறது என்று சினிமா வட்டாரங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 133

    0

    0

    Leave a Reply