படத்தில் இருந்து விலகிய சிவகார்த்திகேயன்…தயாரிப்பாளர் தான் காரணமா..விக்னேஷ் சிவன் ஆதங்கம்..!
Author: Selvan30 November 2024, 1:20 pm
விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார்.
இவர் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தை நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு மே மதம் வெளியாகவுள்ளது.இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்து தற்போது விக்னேஷ் சிவன் பேசியுள்ளார்.
இதையும் படியுங்க: “விடாமுயற்சி” வைரலாகும் அனிருத் பதிவு..பொங்கலுக்கு சம்பவம் உறுதி…!
இந்த படத்தை 2018 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து இயக்கவிருந்த நிலையில்,தயாரிப்பாளர் படத்தின் கதையை கேட்டு படத்தின் கதையை மாற்றுமாறு என்னிடம் வற்புறுத்தினார்.இதனால் LIK படத்தை சிவகார்த்திகேயன் வைத்து எடுப்பதை கைவிட்டார் விக்னேஷ் சிவன்.
தற்போது தன்னுடைய சொந்த தயாரிப்பில் எடுத்து தக்க பதிலடி கொடுக்கும் முனைப்பில் இறங்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.