நயன்-விக்கி இரட்டை குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி?.. என்ன ஆச்சோ…? பதறும் ரசிகர்கள்..!

Author: Vignesh
12 October 2022, 8:45 pm

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பலர் திருமணம் ஆகி 4 மாதங்களே ஆன நிலையில் இருவரும் பெற்றோர் ஆனது எப்படி என கேள்வி எழுப்பியும் வருகின்றனர். இந்நிலையில், வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றதும், கேரளாவில் உள்ள நயன்தாராவின் உறவினர் ஒருவர் தான் வாடகைத்தாயாக இருந்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.

Nayanthara-Twins-3-Updatenews360

இதனிடையே, சுகாதாரத்துறை அமைச்சர் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நயன்தாராவின் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்ததாகவும், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இரட்டை குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா இல்லை மருத்துவமனையில் இருக்கிறார்களா என்பதை விக்னேஷ் சிவன் தான் தெளிவுபடுத்த வேண்டும்.இந்த தகவலை அறிந்த நயன்தாரா ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

  • Annamalai Warning About VijayTrisha Controversy விஜயுடன் திரிஷா சென்றால் தப்பா? சும்மா விட மாட்டேன் : பகிரங்க எச்சரிக்கை!
  • Views: - 483

    0

    0