ஹேப்பி பர்த்டே தங்கம்ஸ்…. உயிர் – உலக் புகைப்படங்களை வெளியிட்ட விக்கி – நயன் ஜோடி!

Author: Shree
27 September 2023, 10:47 am

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு உயிர் – உலக் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மகன்களுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடும் விக்கி – நயன் ஜோடி அவர்களின் அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

அந்த பதில்,

என் முகம் கொண்டா .. என் உயிர்
என் குணம் கொண்டா … என் உலகம்

(இந்த வரிகளையும் எங்களின் படங்களையும் ஒன்றாக பதிவிட நீண்ட நாட்களாக காத்திருந்தேன் என் அன்பான மகன்களே) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பு மகன்களே… உயிர் ருத்ரோநீல் & உலக் டெய்விக் அப்பாவும் அம்மாவும் வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு உங்களை விரும்புகிறோம்!

நன்றி எங்கள் வாழ்க்கையில் வந்து அதை மிகவும் மகிழ்ச்சியாக ஆக்கியதற்கு உங்கள் இருவருக்கும் நன்றி! நீங்கள் அனைத்து நேர்மறைகளையும் ஆசீர்வாதங்களையும் கொண்டு வந்துள்ளீர்கள், இந்த 1 முழு ஆண்டு வாழ்நாள் முழுவதும் ரசிக்க வேண்டிய தருணங்களால் நிரப்பப்பட்டுள்ளது! உன்னை காதலிக்கிறேன் 2!
நீங்கள் எங்கள் உலகம் & எங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என கூறி நெகிழ்ந்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ