அஜித்துக்கும் எனக்கும் இதுதான் பிரச்சனை: AK 62-விலகல் குறித்து முதன்முறையாக உண்மையை உடைத்த விக்னேஷ் சிவன்..!

Author: Vignesh
7 April 2023, 12:30 pm

தமிழ் சினிமாவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து, நானும் ரவுடி தான் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். நடிகர் அஜித்தின் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் சில காரணங்களால் அது கை கூடி வரவில்லை.

nayanthara-vignesh-shivan-updatenews360

இருந்தபோதிலும், அதை எதையும் தலையில் ஏற்றி கொள்ளாமல் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் தனது மனைவியான நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவு செய்து வருகிறார்.

இதனிடையே, விக்னேஷ் சிவனை அஜித் அப்படத்தில் இருந்து தூக்கிவிட்டு மகிழ்திருமேனியை இயக்க கமிட் செய்த நிலையில், விக்னேஷ் சிவனுக்கும் அஜித்துக்கும் கருத்து வேறுபாடு என்று பலவிதமான செய்திகள் வெளியானது.

ajith vignesh-updatenews360

தற்போது சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் முதல்முறையாக அஜித் சார் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தயாரிப்பாளருக்கு 2 ஆம் பாதியில் திருப்தி இல்லை என்பதாலும், தனக்கு கிடைச்ச வாய்ப்பு இப்போது மகிழ்திருமேனி சார் மாதிரி ஒருத்தருக்கு கிடைச்சதுல தனக்கு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார். ஒரு ரசிகரா அதை நான் எஞ்சாய் பண்ணுவேன் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்து உள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…