போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் அடித்த நானும் ரவுடி தான் படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாரா உடன் காதல் ஏற்பட்டது. 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இவர்கள், இருவீட்டாரின் சம்மதத்தின் பெயரில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது.
கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்து இருந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை இயக்கவிருந்தார்.
இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அஜித் நடிக்கவிருக்கும் AK62 படத்தின் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் இப்படத்தை இயக்குவதில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகுவதாக தகவல் வெளியானது. அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை கமிட் செய்தார் அஜித்.
இதற்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வந்த நிலையில், தனது வலி, வேதனை, அவமானம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில், “வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, பாராட்டும், வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது.
எனது Wikki6ஆவது படத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்கமாட்டேன். இன்று, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி மகனுக்கு முத்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
This website uses cookies.