முன்னாள் காதலனுடன் சுற்றித்திரிந்த நயன்தாரா – மன உருக்கத்தோடு பாராட்டிய விக்னேஷ் சிவன்!

Author: Shree
21 April 2023, 9:53 pm

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

nayanthara - simbu

இந்நிலையில் விக்னேஷ் சிவன் சிம்புவை குறித்து பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசி நன்றி கூறியுள்ளார். அதாவது, நான் போடா போடி கதையை எழுதிவிட்டு பல நடிகர்களிடம் சென்று கதை கூறினேன். ஆனால், அவர்கள் நான் அறிமுக இயக்குனர் என்பதால் என் கதையை முழுமையாக கேட்காமல் கூட ரிஜெக்ட் செய்துவிட்டார்கள்.

சிம்பு தான் என் கதைக்கும் எனக்கும் ரெஸ்பெக்ட் செய்து நான் நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் அவர் லிரிக்ஸ் எழுத சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார். எனவே சிம்பு தான் என் சினிமா பயணத்திற்கு ஆரம்பத்தில் பெரிதும் உதவினார் என கூறியுள்ளார். என்ன தான் நயன்தாராவின் முன்னாள் காதலனாக சிம்பு இருந்தாலும் அவர் செய்த உதவியை மறக்காமல் நினைந்து நன்றி கூறியிருப்பது வியக்கவைத்துள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1660

    89

    22