இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்கும் விக்னேஷ் சிவன்…அரசாங்க சொத்துக்கு ஆப்பு..அதிர்ச்சியில் அமைச்சர்..!
Author: Selvan12 December 2024, 2:18 pm
புதுச்சேரி ஹோட்டல் ஒப்பந்தம் விவகாரம்
தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் விவாகரத்து பெற்று சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில்,நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி விவாகரத்து பெறாமலே பல விதமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் தனுஷுடன் NOC பிரச்னையில் மோதல் ஏற்பட்டு,சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவியது.அதன் பின்பு நயன்தாரா தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் நடித்தும்,தன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார்.
இதையும் படியுங்க: விவாகரத்து அறிவித்த பிரபல இயக்குனர்.. ரஜினி பிறந்தநாளில் அதிர்ச்சி!
விக்னேஷ் சிவன்-சுற்றுலா துறை அமைச்சருடன் சந்திப்பு
இந்த நிலையில் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு வழக்கில்,ஜனவரி 8 ஆம் தேதி நயன்தாரா பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கும் தருணத்தில், தற்போது விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான,புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள சீகல்ஸ் ஹோட்டலை விலைக்கு கேட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
அவர் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து ஹோட்டல் டீல் குறித்து பேசியுள்ளார்.இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர்,அரசுக்கு சொந்தமான இடத்தை யாருக்கும் கொடுக்க முடியாது என பதிலடி கொடுத்துள்ளார்.
ஏற்கனவே தனுஷ் கேட்ட 10 கோடி நஷ்ட ஈடு வழக்கு நிலுவையில் இருக்கும் போது,தற்போது புதுச்சேரி அரசாங்க நிலத்தை விலைக்கு கேட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.