மன விரக்தியில் விக்னேஷ் சிவன் எடுத்த முடிவு – தத்தளிக்கும் நயன்தாரா!

Author: Shree
11 March 2023, 5:35 pm

நயன்தாராவை காதலித்து ஒட்டுமொத்த சினிமா பிரபலத்தையே யார் அந்த ஆளு என திரும்பி பார்க்க செய்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நானும் ரவுடி தான் படத்தின் மூலம் மிகப்பெரும் அளவில் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு நயன்தாராவை காதலித்து வந்தார். சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். தற்போது இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே வாழ்க்கையில் இருவரும் நிறைய சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்.

விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து அவரது 62வது படத்தை இயக்குவதாக இருந்தார், ஆனால், இவர் எழுதிய கதையில் அஜித்துக்கு திருப்தி இல்லாததால் அவரை தூக்கிவிட்டு வேறு இயக்குனரை வைத்து கதை தயார் செய்துவிட்டார்.

இதனால் கெட்டபெயர் வாங்கி அவமானங்களை சந்தித்த விக்னேஷ் சிவன் தற்போது திடீரென தனது டுவிட்டர் பக்கத்தின் Dp, Cover Pic போன்றவற்றை எடுத்துவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் அஜித் படம் கிடைக்காத விரக்தியில் விக்னேஷ் சிவன் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டாரே. நயன்தாரா பாவம் கெரியரில் கவனத்தை செலுத்துவாரா? கணவரை காப்பாத்துவரா? என புலம்பியுள்ளனர்.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!