ஒரே இரவில் அந்தர்பல்டி அடித்த விக்கி.. கடுப்பான அஜித் ரசிகர்கள்!
Author: Hariharasudhan7 February 2025, 10:27 am
விடாமுயற்சி படம் குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சென்னை: “சில நேரங்களில், விஷயங்கள் எப்படி நடக்கும் என்று கவலைப்படுவதை நிறுத்தும்போது சில மேஜிக் நடக்கும்” என்று யுனிவர்ஸ் கூறுவதாக, இயக்குநர் விக்னேஷ் சிவன் நேற்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு கருத்தை பகிர்ந்திருந்தார்.
ஆனால், அஜித்குமாரின் விடாமுயற்சி படம் வெளியான நாளில், விக்னேஷ் சிவன் இந்த பதிவைப் பகிர்ந்திருப்பது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், விடாமுயற்சி படம் அஜித்தின் 62வது படமாக வெளியாகி உள்ள நிலையில், இந்த 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் சில காரணங்களால் நீக்கப்பட்டார்.
இவ்வாறு இந்த கருத்து வெளியாகி, அஜித் ரசிகர்கள் அதற்கு எதிர்வினையாற்றிய நிலையில், “விடாமுயற்சி ஒரு செம திரில்லர் படமாக உள்ளது. ஒரு புதிரைத் தீர்ப்பது போன்று, படத்தின் முதல் பிரேமில் இருந்து கடைசி பிரேம் வரை உங்களைக் கவர்ந்து இழுக்கிறது.
ஏகே (அஜித்குமார்) சார் ஸ்கிரீன் பிரசென்ஸ், அவரது மென்மையான நடிப்பு, முழுப் படத்தையும் தனது தோள்களில் சுமந்து செல்லும் விதமாக உள்ளது. ஒரு எதார்த்தமான காட்சிகள், ஆபத்தான ஆக்ஷன் காட்சிகள், லேஸ் காட்சிகள் என தனது உணர்ச்சிகளை, தனது கதாபாத்திரத்தை மிகவும் நேர்மையாக வெளிப்படுத்தியுள்ளார்.
அஜித் சார் நடந்து வரும் ஒவ்வொரு முறையும் விசில் அடிப்பதை யாராலும் நிறுத்த முடியாது. சில அற்புதமான காட்சிகளும் படத்தில் உள்ளன.அனிருத்தின் இசையும், மகிழ் திருமேனியின் திரைக்கதையும் மனதை மிகவும் இறுக்கமாக்குகிறது. கடினமான நிலப்பரப்பில் காட்சிகளும், அதன் நிலைத்தன்மையும் பராமரிக்கப்பட்டுள்ள விதமே படக்குழுவின் கடின உழைப்பை வெளிக்காட்டுகிறது.
இதையும் படிங்க: 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!
இந்தப் படத்தை இவ்வளவு சிறப்பாகக் காட்டியதற்காக ஓம் பிரகாஷ், நீரவ் ஆகியோருக்கு நன்றி. உண்மையிலேயே சர்வதேச தரம் விடாமுயற்சி. த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் மற்றும் அனைவரும் சிறந்த நடிப்பு. படத்தின் மகத்தான வெற்றிக்கு லைக்கா புரொடக்ஷனுக்கு பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.
எனவே, நேற்றைய கணக்கை இந்தப் பதிவின் மூலம் விக்னேஷ் சிவன் தீர்த்தாரா என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது. மேலும், விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார்.