10 வருஷம் என் தங்கத்துடன்…கட்டியணைத்து காதலை சொன்ன விக்கி – ரொமான்டிக் கிளிக்ஸ்!

Author: Rajesh
14 February 2024, 5:04 pm

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

ஆனாலும், முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் , தமிழில் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார். படப்பிடிப்பு முடிந்தவுடன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் நயன்தாரா முன்னதாக தனது செல்ல மகன்களுடன் காதலர் தினத்தை கொண்டாடி அந்த ஸ்பெஷல் போட்டோக்களை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு, “உயிர், உலக் நான் உங்கள் இருவரையும் காதலிக்கிறேன். எனது காதலர் தினத்தை எப்போதும் சிறந்ததாக மாற்றியதற்கு நன்றி” என கூறி பதிவிட்டுள்ளார்.

நயன்தாராவை தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன், ‘என் அன்பு காதலி நயன்தாராவுடன் 10 வருட காதல் பயணம்….காதலில் நம்பிக்கை கொண்ட உங்கள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். என் தங்கத்துடன் ஒரு தசாப்தம்… நீ என் உயிர் என்பதிலிருந்து நான் உன் உலகம், இப்போது உயிர் & உலகம் நீ & நான் ஆகியிருக்கிறது!

நம் முதுமையிலும், இனி வரும் பிறவிகளிலும் ரசிக்க பல தருணங்களுடன் நீண்ட தூரம் வந்தது பெரிய பாக்கியம் love you sooo much உயிர் என காதலில் உருகி பதிவிட்டு நயன்தாராவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை வெளியிட்டு அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 454

    0

    0