வன்மத்தை பகிரங்கமாக வெளியிட்ட விக்னேஷ் சிவன்.. தரமான பதிலடி கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!
Author: Vignesh10 October 2023, 1:45 pm
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது. மேலும், லியோ படத்திற்கு சென்சார் யூ/ ஏ சான்றுகள் வழங்கி உள்ளது.
இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி அளித்து பல விஷயங்களை பகிர்ந்தும் வருகிறார். இதில், விஜய்க்கும் லோகேஷ்க்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவம் பற்றி கூறியிருந்தார். இதை சினிமா விமர்சகர் ஒருவர் பகிர அதை இயக்குனர் விக்னேஷ் சிவன் like செய்து அதன் பின்னர் அன்லைக் செய்துள்ளார்.
இதனை பலர் கடுமையாக விமர்சித்தும் விக்னேஷ் சிவனை விஜய் ரசிகர்கள் திட்டியும் வந்தனர். ஆனால், இதற்கு விக்னேஷ் சிவன் விஜய் ரசிகர்கள் மற்றும் லோகேஷ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டும், நான் லோகேஷ் கனகராஜ் பேட்டி என்ற ஒரே காரணத்தினாலும் அதில் நயன்தாரா புகைப்படம் இருந்ததாலும் அந்த பதிவினை சரியாக கவனிக்காமல் லைக் செய்தேன்.
Chill bro ? https://t.co/W75owlMyV2
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 9, 2023
நானும் லியோ படத்திற்காக தான் காத்திருக்கிறேன் என்று கூறி உள்ளார். இதனை கண்ட லோகேஷ் கனகராஜ் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்ட எக்ஸ் தளத்தில் ஜில் ப்ரோ என்று கூறி சமாதானப்படுத்தி உள்ளார்.