அப்பா சென்டிமென்ட்.. விக்னேஷ் சிவன் சொன்ன அந்த வார்த்தை… கண்கலங்கிய சூப்பர் ஸ்டார்..!!
Author: Vignesh9 August 2023, 1:30 pm
தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.
70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ஆடியோ லன்ச் விழா நடைபெற்றது.
அந்த விழாவில், ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை பற்றி பேசினார். சூப்பர்ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லை தான் என்றும், தனது வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை ரசிகர்களிடம் ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், ரத்தமாரே என்ற பாடலை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் மேடையில் பேசுகையில், அதில் அவர் தலைவர் முன்னாடி நிக்கிறேன். அப்பா மகன் பற்றிய பாட்டு எழுதி இருக்கிறேன். நானும் இரு குழந்தைகளுக்கு அப்பா என்றும், நான் ஒரு பாட்டை தலைவருக்காக எழுதியதில் சந்தோஷம்.
ரஜினியை பார்த்து நான் உங்களிடம் ஒன்று சொல்லணும் உங்கள் மீது அனிருத் மிகப்பெரிய காதல் வைத்திருக்கிறார். உங்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். சவுந்தர்யா மேடம், ஐஸ்வர்யா மேடம். உங்களுக்கு ஒரு மகன் இருந்திருந்தால் அனிருத்தை பார்த்து பொறாமைப் பட்டிருப்பார் என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
அப்படி ஒரு காதல் உங்கள் மீது அனிருத் வைத்திருக்கிறார் என்று கூறியதும் அனிருத் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் எமோஷனல் ஆகி கண்கலங்கி விட்டனர். தற்போது, இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.