அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு… ஏன்யா நீ வேற வயித்தெரிச்சல கொட்டிக்குற?
Author: Shree14 August 2023, 6:01 pm
தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.
முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.
அதன் பின்னர் தான் தற்போது ஜவான் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படம் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். இதன் மூலம் அவருக்கு பாலிவுட்டில் ஒரு நல்ல ஸ்கோப் கிடைக்கும் எதிர்பார்க்கலாம். இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் weekend’யை வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு காதலை வெளிப்படுத்தியுள்ளனர்.ஆம் பால்கனியில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போட்டோவை வெளியிட்டு “என்பை மட்டும் அள்ளி வீசும் வீடு ! அமைவது அழகு. அதிசயம் அற்புதம் அதுவே” என கூறி பதிவிட்டுள்ளார். இதை பார்த்து முரட்டு சிங்கிள்ஸ் ” ஏன்யா நீ வேற வைத்தெரிச்சலை கொட்டிக்கிற” என கடுப்பாகி கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.