நயன்தாரா “செம்பருத்தி டீ” சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாராகில் புதிய பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “நாங்கள் எம்பிஏ பட்டதாரிகள் இல்லை… எனக்கும் நயன்தாராவுக்கும் சினிமாதான் தெரியும், அதை தினம் தினம் கற்று வருகிறோம்.
மகத்தான அறிவு மற்றும் விலைமதிப்பற்ற அனுபவப் பகிர்வு எங்களுடனும் எங்கள் CEO கள் குழுவுடனும் பொறுமையாக மணிநேரம் நேரத்தை செலவழித்ததற்காக வேலுமணி உங்களுக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். எங்கள் தொழில் சார்ந்த அனைத்திலும் நாங்கள் எப்போதும் சரியான விஷயங்களைச் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்துங்கள் என பதிவிட்டுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த வெளிப்படையான மற்றும் நேர்மையான பதிவிற்கு பலரும் லைக்ஸ் குவித்துள்ளனர்.
முன்னதாக நடிகை நயன்தாரா, நயன்தாரா செம்பருத்தி டீயை தான் தினமும் குடித்து வருவதாக கூறி அது குறித்த மருத்துவ பயன்களை தனது instagram-ல் பதிவிட்டார். அதாவது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவர்களுக்கு செம்பருத்தி டீ மிகவும் நல்லது என பதிவிட்டிருந்தார். நயன்தாராவின் இந்த பதிவிற்கு டாக்டர் பிலிப்ஸ் என்ற கல்லீரல் மருத்துவர் தனது எக்ஸ் தளத்தில் … நயன்தாரா செம்பருத்தி டீ குடிப்பதற்கு ருசியானது என்பதோடு நிறுத்திக் கொண்டால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால், அதோடு நிறுத்தாமல் செம்பருத்தி டீ யின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசி தனது அறிவின்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். சமந்தாவை போலவே நயன்தாராவும் தன்னுடைய ஃபாலோவர்களை தவறான வழியில் நடத்துகிறார் என பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து அந்த மருத்துவருக்கு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்ல் பதிலடி கொடுத்த நயன்தாரா “முட்டாள்களுடன் ஒருபோதும் விவாதம் செய்யாதீர்கள்… அவர்கள் உங்களை மட்டமான மனநிலைக்கு இழுத்துச் சென்று விடுவார்கள். அவர்களின் அனுபவத்தால் உங்களை தோற்கடித்து விடுவார்கள் “என கடும் கோபமாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.