அந்த விஷயத்திற்காக நயன்தாராவை கைவிட்ட விக்னேஷ் சிவன்: ஏன் என்னாச்சு? என பதறும் ரசிகர்கள்..!
Author: Vignesh28 October 2022, 3:30 pm
தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் குமார் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைத்து வருகின்றனர். இவர் கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார். இதனிடையே, அஜித் பைக்கில் ஹிமாலயாவிற்கு சென்றபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில், எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களால், பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதனிடையே, ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்திருக்கிறார் அஜித் குமார். இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார். தற்போதைக்கு ஏ.கே. 62 என்று அழைக்கப்படும் அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஏ.கே. 62 படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் நயன்தாரா அல்ல த்ரிஷாவை ஹீரோயினாக்க முடிவு செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
ஏ.கே. 62 படத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்ற தகவலை விக்னேஷ் சிவன் உறுதி செய்யவில்லை. இந்த தகவல் மட்டும் உண்மை எனில் கிரீடம், மங்காத்தாவை அடுத்து மூன்றாவது முறையாக அஜித் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் த்ரிஷா.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியிருக்கிறார்கள். மகன்களுடன் நேரம் செலவிட நடிப்பில் இருந்து பிரேக் எடுக்க விரும்புகிறாராம் நயன்தாரா. அதை மனதில் வைத்து தான் நயன்தாராவுக்கு பதில் த்ரிஷாவை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன் என்று பேசப்படுகிறது.