ஹேப்பி பர்த்டே #உத்தமன்…. பிரதீப் ரங்கநாதனுக்கு வித்யாசமா வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்!
Author: Shree26 July 2023, 10:06 am
தமிழ் சினிமாவில் குறும்படம் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து நல்ல வரவேற்பு பெற்றவர் இளம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். தனது 20 வயதிலே கோமாளி படத்தினை இயக்கியிருந்த பிரதீப், லவ் டுடே என்ற படத்தினை எடுத்து மாபெரும் வெற்றியை பெற்று ஹிட் இயக்குனராக முத்திரைகுத்தப்பட்டார்.

இவரது படங்களில் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இளைஞர்கள் பெரும்பாலும் விரும்பி பார்ப்பது போன்று முழு முழுக்க காமெடி ஜானரில் படமெடுத்து வித்யாசம் காட்டுவதே பிரதீப்பின் ஸ்டைல். இது தான் அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. லவ் டுடே எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றி பெற்று 100 நாட்கள் கடந்து திரையரங்கில் ஓடி வசூல் சாதனை படைத்தது.
அந்த படத்திற்கு பின்னர் நிறைய டாப் ஹீரோக்களின் படங்களை இயக்க பிரதீப் ரங்கநாதனுக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அப்படித்தான் விஜய்யை வைத்து படம் இயக்க பிரதீப் ரங்கநாதனுக்கு வாய்ப்பு வீடு தேடி வந்ததாம். ஆனால், அவர் விஜய்யை வச்சியெல்லாம் படமெடுக்க எனக்கு விருப்பம் இல்லை. அவருக்கு போட்டியாக பெரிய ஹீரோவாகுவதே என் கனவு.
அதனால் நானா இப்போதைக்கு ஹீரோவாக நடித்து நம்பர் ஒன் ஹீரோவாகவேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கிறேன் என கூறி இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம். எனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதியப்படமொன்றில் நடித்து வரும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறாராம். இந்நிலையில் நேற்று பிரதீப் ரங்கநாதன் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்,
“திரு. நைஸ் சோல் #உத்தமன் பிரதீப் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அண்மையில் எனக்கு பிடித்த திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் ஒரு சிறந்த நடிகர். உங்களின் நட்பைப் பெற்றதில் மகிழ்ச்சி மற்றும் சில நல்ல தருணங்களை உங்களிடம் ஏற்கனவே சேகரித்ததில் மகிழ்ச்சி. எதிர்காலத்தில் இன்னும் பலவற்றை உருவாக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். நட்சத்திரங்களைப் போல நீங்கள் பிரகாசிக்க காத்திருக்கிறோம். ஆசீர்வதிக்கப்பட்டு மகிழ்ச்சியாக இருங்கள் என வாழ்த்தியுள்ளார்.