கவர்ச்சி நடிகை வீட்டினுள் விக்னேஷ் சிவன்…பகிரங்கமாக தாக்கிய பிஸ்மி..!
Author: Selvan18 December 2024, 3:13 pm
தொடரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சர்ச்சை
சமீப நாட்களாக பல வித சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.தனுசுடன் ஏற்பட்ட NOC பிரச்னை சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி பெரும் விவாத பொருளாக மாறியது.
அதன்பின்பு நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஒருவையொருவர் தங்களுடைய சமூகவலைத்தளங்களில் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில் நயன்தாரா ஒரு ஆங்கில ஊடகத்தில் வலைப்பேச்சு குழுவை சேர்ந்த 3 பேரை 3 குரங்கு என்று விமர்சித்தார்.இந்த கருத்தை வன்மையாக பலரும் எதிர்த்தனர்.
இதையும் படியுங்க: அண்ணன் வரார் வழிவிடு…”சிம்பு”கூட கைகோர்த்த பிரபல இயக்குனர்…அடுத்த பட அப்டேட் வெளியீடு..!
அதற்கிடையில் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசுக்குக்கு சொந்தமான ஒரு நட்சத்திர ஹோட்டலை விலைக்கு கேட்டதாக தகவல் பரவியது.இதனை மறுத்து விக்னேஷ் சிவன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் நான் அந்த மாதிரி எதுவும் பேச வில்லை.என்னுடைய படம் சம்மந்தமான ஷூட்டிங் வேலைக்காக தான் அங்கு சென்றதாக கூறினார்.தற்போது மீண்டும் வலைப்பேச்சு பிஸ்மி ஒரு குற்றசாட்டை விக்னேஷ் சிவன் மீது வைத்துள்ளார்.
அதாவது கவர்ச்சி நடிகை சோனா வீட்டில் வீட்டு வேலை செய்தவர் தான் விக்னேஷ் சிவன்,அவர் அங்கு தங்கி ரொம்ப நாள் வீட்டு வேலை பார்த்துள்ளார் என்ற தகவலை கூறியுள்ளார்.இந்த தகவல் ரசிகர்களை தற்போது அதிர்ச்சியாக்கியுள்ளது.