சினிமாவை விட்டு இனி சின்னத்திரையில் இந்த நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன்.. எந்த சேனல் தெரியுமா..?

Author: Rajesh
18 June 2023, 8:00 pm

போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் அடித்த நானும் ரவுடி தான் படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாரா உடன் காதல் ஏற்பட்டது.

7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இவர்கள், இருவீட்டாரின் சம்மதத்தின் பெயரில் 2022ம் ஆண்டு ஜுன் 9ம் தேதி நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்து இருந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை இயக்கவிருந்தார். ஆனால், சில பல காரணங்களினால் அந்த படத்தை விட்டு விலகினார் விக்னேஷ் சிவன். இப்படி பெரும் ஏமாற்றத்தை சந்தித்த இவர், தன் குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.

இந்நிலையில், சினிமாவை விட்டு விக்னேஷ் சிவன் சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜீ தமிழ் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காபி வித் டிடி போன்று இருக்கும் என்று கூறப்படுகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 487

    0

    0