நயன்தாரா போல் விக்னேஷ் சிவனுக்கும் இருந்த எக்ஸ்.. 9 வருட காதல் முறிவுக்கு காரணம் இதுதானா..!
Author: Vignesh14 February 2024, 5:09 pm
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையான நயன்தார தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.
பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.
தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே 9 ஸ்கின் என்ற சருமம் சார்ந்த products தொழில் ஒன்றை ஆரம்பித்தார். சமீபத்தில் femi9 என்ற நேப்கின் கம்பெனி ஒன்றை சொந்தமாக துவங்கி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஆரம்பத்தில் இருந்து நயன் தாரா சில காதல் தோல்விகளையும் பிரச்சனைகளையும் சந்தித்து வந்தார். அதேபோல், விக்னேஷ் சிவன் வாழ்க்கையிலும் காதல் தோல்வி இருந்துள்ள விஷயம் தற்போது வெளியாகியுள்ளது. சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஒரு பெண்ணை 9 ஆண்டுகளாக விக்னேஷ் சிவன் காதலித்து வந்துள்ளார்.
விக்னேஷ் சிவன் ஒருநாள் தீபாவளி பண்டிகைக்கு தன் காதலியை அம்மாவிடமும் அறிமுகம் செய்து வைக்க வீட்டிற்கு கூட்டிச்சென்று இருக்கிறார். அங்கு புடவையில் வராமல், ஜீன்ஸ் பேண்ட்டில் வந்தது விக்னேஷ் அம்மாவிற்கு பிடிக்க வில்லையாம்.
மேலும், காதலிக்கும் அம்மாவிற்கும் இடையே செட்டாகவில்லை என்பதாலும் சின்ன சின்ன விசயங்களுக்கு கூட அட்ஜெஸ்ட் செய்து கொள்ளமாட்டாராம். இதனால் இருவரும் சுமூகமான உறவு இல்லாத காரணத்தில் தான் இருவரும் பிரேக் அப் செய்துவிட்டோம் என்று விக்னேஷ் சிவன் கூறி உள்ளார்.