நயன்தாராவா வேண்டவே வேண்டாம்-ன்னு ஒதுக்கிய அஜித்.. அந்த நடிகைக்கு அடித்த ஜாக்பாட்..!

Author: Vignesh
15 February 2023, 5:30 pm

நயன்தாரா விக்னேஷ்சிவன் ஜோடி கடந்த வருடம் திருமணம் செய்தனர். அதற்கு முன்னவே அவர்கள் பதிவு திருமணம் செய்தது இரட்டைக் குழந்தை விவகாரத்தில் வெளியானது.

அவர்களின் சர்ச்சை சற்று ஓய்ந்த நிலையில், விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து AK62 படம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கான நடிகர், நடிகைகள் தேர்விலும் ஈடுபட்டு வந்தார் விக்கி. அதன்படி, வில்லனாக அரவிந்த சாமி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அதோடு நகைச்சுவை நடிகர் சந்தானமும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

Ajith - Updatenews360

இப்படி படு ஜோராக நடைபெற்று வந்த ஏகே 62 பணிகள் கடந்த மாத இறுதியில் நிறுத்தப்பட்டு, அப்படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கிவிட்டனர். அவருக்கு பதில் மகிழ் திருமேனி தற்போது ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

இதற்கு காரணம் விக்னேஷ் சிவன் தயார் செய்த கதை அஜித்துக்கும் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கும் பிடிக்க வில்லை. இதன் காரணமாக அவரை படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு தகவலும் பரவி வருகிறது.

ஏகே 62ல் விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டதற்கு நயன்தாரா தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், அஜித்துடன் நயன்தாராவைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என விக்னேஷ் சிவன் முடிவு செய்திருந்தார்.

ஆனால் லைகா நிறுவனம், திரிஷாவை நடிக்க வைக்க சொல்லியுள்ளனர். நோ சொன்ன விக்கிக்கு, ஐஸ்வர்யா ராய், காஜல் என கைக்காட்ட ஒத்துக்கொள்ளாத விக்கி, கடைசியில் பாலிவுட் நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்யும் நேரத்தில் அவரையும் வேண்டாம் என சொல்லிவிட்டார்.

ஏகே 62ல் நடிக்க நயன் தாராவை சிபாரிசு செய்து அஜித்திடம் விக்னேஷ் சிவன் தெரிவித்ததால், அஜித், வேண்டவே வேண்டாம் என்று கூறியதோடு கத்ரினா கைஃப், திரிஷா பெயர்களை கூறியிருக்கிறார்.

லைக்கா நிறுவனமும் கத்ரினா கைஃப்-ஐ அணுகியதோடு 15 கொடி சம்பளமும் பேசி உள்ளனர். அதை ஒரு பொருட்டாக கருதாமல் விக்னேஷ் சிவன் நயன் தாராவின் பெயரை கூறியே அஜித்தை டார்ச்சர் செய்து வந்துள்ளாராம். அதனால் தான் கடுப்பாகிய அஜித், லைக்கா நிறுவனம் விக்னேஷ் சிவனை தூக்க காரணமாக இருந்துள்ளதாம்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 785

    6

    0