நயன்தாரா பணத்தை வீணடிக்கும் விக்னேஷ் சிவன்…. நடுத்தெருவுக்கு வந்திடுவாரா Lady superstar?

Author: Shree
26 June 2023, 5:47 pm

போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் அடித்த நானும் ரவுடி தான் படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாரா உடன் காதல் ஏற்பட்டது.

7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இவர்கள், இருவீட்டாரின் சம்மதத்தின் பெயரில் 2022ம் ஆண்டு ஜுன் 9ம் தேதி நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்து இருந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை இயக்கவிருந்தார். ஆனால், சில பல காரணங்களினால் அந்த படத்தை விட்டு விலகினார் விக்னேஷ் சிவன். இப்படி பெரும் ஏமாற்றத்தை சந்தித்தார்.

nayanthara - vignesh shivan

இதையடுத்து வாய்ப்புகள் கிடைக்காததால் விக்னேஷ் சிவன் பிரபல டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது புது ஒரு தொழிலை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கேரளாவில், மிகப்பெரிய அடுக்குமாடி கொண்ட வீட்டினை கட்டவுள்ளாராம்.160க்கும் மேற்பட்ட பிளாட்கள் உள்ள கட்டிடத்தை கட்டவுள்ளார்களாம். அதற்கான வேலையில் விக்னேஷ் சிவன் பார்த்து வருகிறாராம்.

கையில் இருக்கும் பணத்தை வைத்து ஆரம்பித்துவிட்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து அந்த பிரம்மாண்ட வீட்டை கட்டவுள்ளாராம். படவாய்ப்புகளே இல்லாமல், வருமானம் இல்லாமல் இருக்கும் விக்னேஷ் சிவனால் இது எப்படி சாத்தியமாகும் என நீங்கள் கேட்டகலாம்.இது மொத்தம் நயன்தாரா சம்பாத்தியத்தில் தான் கட்டப்போகிறாராம். அதற்காக பல படங்களில் நயன்தாரா நடிக்க முடிவெடுத்துள்ளாராம். அந்த லிஸ்ட்டில் அறம் 2வும் இருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர்கள் அந்தணன் கூறியிருக்கிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 449

    0

    0