விஜய் 69 திரைப்படம் ஓடிடியில் ரீலிஸ்…படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!
Author: Selvan7 November 2024, 12:04 pm
ஓடிடியில் விஜய் 69 திரைப்படம் ….ரசிகர்கள் அதிர்ச்சி…!
கொரோனா காலத்திற்கு பிறகு மக்கள் பெரும்பாலும் திரைப்படங்களை ஓடிடி தளத்தில் பார்க்கவே விரும்புகின்றனர் .சமீப காலமாக நல்ல நல்ல படங்களை படக்குழு ஓடிடி தளத்தில் போட்டி போட்டு வெளியிட்டு வறுகின்றனர்.
அந்த வகையில் இந்த வாரம் பல படங்கள் ஓடிடி தளத்தில் வரிசை கட்டி போட்டி போடுகின்றனர்.
விஜய் 69
ஹிந்தியில் அனுபம் கெர் நடிப்பில் அக்சய் ராய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விஜய் 69 .இப்படத்தின் கதை 69 வயது முதியவர் எப்படி ட்ரையத்லான் போட்டியில் கலந்து கொண்டு அதை எப்படி முடிக்க போராடினார் என்பது தான் படத்தின் கதை.இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் .
இதையும் படியுங்க: மீண்டும் இணைகிறார்களா பிரபல காதல் ஜோடி…அமரன் படம் கொடுத்த வாய்ப்பு…!
நவம்பர் 8ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இத்திரைப்படத்தை பார்க்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தமிழில் ரஜினி நடித்து வெளி வந்த வேட்டையன் திரைப்படமும் வரும் நவம்பர் 8 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.