அப்பா வெளியே போக; மகன் உள்ளே வர; லைகா கொடுத்த செம்ம அப்டேட்

Author: Sudha
20 July 2024, 12:52 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தன்னுடைய 69 வது படம்தான் தன்னுடைய கடைசி படமாக இருக்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.அரசியலில் ஆர்வம் காட்டிவரும் நடிகர் விஜய் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தேர்தலைச் சந்திக்க தமிழக வெற்றிக் கழகத்தினை உருவாக்கி அதனை வழி நடத்தி வருகிறார்.

அவரது 69 வது திரைப்படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்குவார் என சொல்லப்பட்டது.மேலும் படத்தில் விஜய் 50 வயது கதாபாத்திரத்திலேயே நடிக்கின்றார் எனவும் கூறப்படுகின்றது. இதனால் அந்த கதாபாத்திரத்திற்கு ஜோடியாக அவருடன் ஏற்கனவே நடித்த கதாநாயகிகளில் ரம்பாவை விஜய் டிக் செய்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவுப்பு தி கோட் படம் ரிலீஸ் ஆன பின்னர் வெளிவரும் என கூறப்படுகின்றது. ஏற்கனவே விஜய் மற்றும் ரம்பா இருவரும் மின்சாரா கண்ணா, என்றென்றும் காதல், நினைத்தேன் வந்தாய் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படி விஜய் தன்னுடைய 69 வது திரைப் படத்துடன் சினிமாவிலிருந்து வெளியே போக முடிவெடுத்துள்ள நிலையில் தன் தந்தையின் இடத்தை நிரப்ப தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறார் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய்.

இயக்குனராக அவரை அறிமுகப்படுத்துவதாக லைகா புரொடக்ஷன் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.படத்தின் படப்பிடிப்பு 2025 இல் ஆரம்பமாகும் என்றும் சொல்லப் படுகிறது.கதாநாயகனாக துல்கர் சல்மான் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!