மனைவி சங்கீதாவுடன் என்ட்ரி கொடுக்கும் விஜய்… மிரள வைக்கும் தவெக 2வது மாநாடு!!
Author: Udayachandran RadhaKrishnan1 January 2025, 2:19 pm
நடிகர் விஜய் அரசியலில் என்ட்ரி கொடுத்தது பல அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு பேச்சாக உள்ளது. அவர் கடந்த 2024ஆம் ஆண்டு நடத்திய மாநாடு தற்போது வரை பேசு பொருளாக உள்ளது.
விஜய் மனைவி என்ட்ரி… மிரள வைக்கும் தவெக 2வது மாநாடு!
மேலும் இவர் அண்மையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசியது பேசுபொருளானது. விஜய் அரசியல் பேச்சு ஒவ்வொரு அரசியல் கட்சியினருக்கும் அதை பற்றியே பேசி வருகின்றனர்.
இதையும் படியுங்க: பாட்ஷா ஸ்டைலில் புத்தாண்டு வாழ்த்து: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு..!
விஜய்க்கு ரசிகர்கள் பலம் அதிகம் உள்ளதால் அடுத்தக்கட்ட அரசியல் மாநாட்டை நடத்த ஆயத்தமாகி வருகிறார்.
முதல் மாநாடு விழுப்புரத்தில் நடந்த நிலையில், அடுத்த மாநாட்டை வி என்ற எழுத்துள்ள நகரத்தில் நடத்த முடிவெடுத்துள்ளார். மேலும் இந்த மாநாட்டில் தனது மனைவி சங்கீதா மற்றும் குடும்பத்தினரை பங்கேற்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் மாநாட்டின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், இரண்டாவது மாநாட்டை நடத்த விஜய் முடிவெடுத்துள்ளது சக அரசியல் கட்சிகளிடையே பிரளயத்தை உண்டாக்கியுள்ளது.